மேலிட ஒருங்கிணைப்பாளர் முன் காங்., கட்சியினர் மோதல்
மேலிட ஒருங்கிணைப்பாளர் முன் காங்., கட்சியினர் மோதல்
ADDED : ஜன 30, 2024 12:33 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த காங்., ஆலோசனை கூட்டத்தில் மேலிட ஒருங்கிணைப்பாளர் சொர்ண சேதுராமன் முன்னிலையில் கட்சியினர் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரத்தில் காங்., சார்பில் லோக்சபா தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் பாண்டி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத்தலைவர் செல்லத்துரை அப்துல்லா பேசுகையில், ''உட்கட்சி பூசல், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பதவியை ராஜினாமா செய்தேன். இங்கு உழைப்பவருக்கு மதிப்பில்லை,'' என்றார். தொண்டர்கள் பலர் அவருக்க ஆதரவாக குரல் எழுப்பினர். சிலர் எதிர்க்க கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அவர்களை மேலிட ஒருங்கிணைப்பாளர் சொர்ணசேதுராமன் சமாதானப்படுத்தினார். பொறுப்புக்குழு உறுப்பினர் கோட்டைமுத்து கட்சியில் நடந்த கசப்புணர்வுகளை பட்டியலிட்டார். தொண்டர்கள் பிளக்ஸ்பேனரில் முன்னாள் முதல்வர் காமராஜர் படம் இல்லை என குரல் எழுப்பினர். இப்படி தொடர்ந்து நிர்வாகிகள் பேசியபோது கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் கூட்டம் தடைபட்டு பின் நடந்தது.
தேசிய மீனவர் காங்., நிர்வாகி ஆம்ஸ்ட்ராங், பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம்பாண்டியன், மாநில செயலாளர் செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.