தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/செல்வப்பெருந்தகை பதிவு காங்கிரஸ் கட்சியினர் ‘ஷாக்’

செல்வப்பெருந்தகை பதிவு காங்கிரஸ் கட்சியினர் ‘ஷாக்’

செல்வப்பெருந்தகை பதிவு காங்கிரஸ் கட்சியினர் ‘ஷாக்’


ADDED : நவ 29, 2026 08:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 08:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சோனியா, ராகுல் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி தலைவர்கள், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்திக்க வந்தபோது, காங்., தமிழக முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, தன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து, அக்கட்சியினரை அதிர வைத்தது.

தொகுதி மறு வரையறை மசோதாவுக்கான ஆதரவை திரும்பப் பெறும்படி, ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த, ‘இண்டி’ கூட்டணி தலைவர்கள், இன்று (நவ.,29) சென்னை வந்தனர். இந்நிலையில், இன்று காலை செல்வப்பெருந்தகை தன் சமூக வலைதள பக்கத்தில், ‘அற்றகுளத்து அறுநீர் பறவைகளே, நாம் விட்டு சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம்’ என, பதிவிட்டிருந்தார்.

தி.மு.க., பாலைவனம் அல்ல; அது சோலைவனம். அதை புரியாமல், தி.மு.க., கூட்டணியை உதறிவிட்டு, த.வெ.க., பக்கம் சென்று விட்டீர்கள் என கூறும் வகையில், அவர் பதிவிட்டது, காங்கிரஸ் கட்சியினரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள், செல்வப்பெருந்தகை கருத்துக்கு, சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். அதே நேரத்தில், தி.மு.க.,வினர் அந்த கருத்தை ஆதரித்தும் பதிவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us