ADDED : மே 09, 2026 04:56 AM

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத கவர்னரை கண்டித்து, சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகே, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியவாறு, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில், 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்று, த.வெ.க., தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுமாறு கோஷங்களை எழுப்பினர்.
கிரீஷ் ஷோடங்கர் பேசியதாவது:
கவர்னர் வாயிலாக, தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று, கவர்னர் உத்தரவு போட, எந்த அதிகாரமும் இல்லை. பெரும்பான்மையை சட்டசபையில் தான் நிரூபிக்க வேண்டும்.
த.வெ.க.,வை ஆட்சி அமைக்க விடக்கூடாது என, கவர்னருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஒரு எம்.எல்.ஏ., மட்டுமே வைத்துள்ள பா.ஜ., தமிழகத்தை ஆட்சி செய்ய நினைக்கிறது. உடனடியாக விஜயை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
