சி.பி.ஐ., வாயிலாக தி.மு.க.,வை காங்கிரஸ் அச்சுறுத்தியது
சி.பி.ஐ., வாயிலாக தி.மு.க.,வை காங்கிரஸ் அச்சுறுத்தியது
ADDED : ஏப் 19, 2026 02:13 AM

தேர்தலுக்கு ஐந்து நாட்களே உள்ள நிலையில், காங்., மற்றும் தி.மு.க., தங்கள் கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது என்பதில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒரு கட்சி, 'இண்டி' கூட்டணி என்றும், மற்றொரு கட்சி, 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி' என்றும் அழைக்கின்றன. ராகுல் தன் பிரசாரத்தில், 'தி.மு.க.,வை எந்த நேரத்திலும் தங்கள் கட்சி அச்சுறுத்தவில்லை' என்கிறார்.
கடந்த 2011 சட்டசபை தேர்தலின்போது நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சை, ராகுல் மறந்து விட்டார். அப்போது, காங்கிரசுக்கு 63 தொகுதிகளை பெற, சி.பி.ஐ., சோதனை வாயிலாக தி.மு.க., எவ்வாறு அச்சுறுத்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த சோதனை இன்றும் தி.மு.க.,வின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. கடந்த 2013ல் காங்., ஆதரவை தி.மு.க., திரும்ப பெற்ற சில தினங்களில், ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.
- அண்ணாமலை முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,
