உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 17, 2026 05:53 AM

அ நிறம் | அளவு
அ.தி.மு.க., ஆட்சியில், கூட்டுறவு வங்கிகளில், இருமுறை விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் மக்களுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.
அ.தி.மு.க., கூட்டணியில் சில கட்சிகள், விரைவில் இணையும். மத்திய அரசு கொண்டு வந்த ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, தி.மு.க., அரசு தன்னுடைய திட்டம் போல அறிவித்துள்ளது. இதை, பெரும்பாலான அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்க்கின்றன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சூழலைப் பொறுத்து, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
வரும் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்., இருக்காது. தேர்தல் நேரத்தில், பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க., கொடுக்கும். ஆட்சிக்கு வந்த பின், அதை நிறைவேற்றாமல் ஏமாற்றும்.
- பழனிசாமி,
பொதுச்செயலர்,
அ.தி.மு.க.,
