ADDED : நவ 14, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம், வரும் 20ல், சென்னை அறிவாலயத்தில் நடக்கிறது.
இதுகுறித்து, அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை:
தி.மு.க.,வின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம், வரும் 20ம் தேதி காலை, 10:30 மணிக்கு நடக்கவுள்ளது.
அதில், உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

