தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கன்டெய்னர் லாரி மோதி அறுந்து விழுந்த மின்கம்பி

கன்டெய்னர் லாரி மோதி அறுந்து விழுந்த மின்கம்பி

கன்டெய்னர் லாரி மோதி அறுந்து விழுந்த மின்கம்பி


UPDATED : நவ 06, 2026 08:21 PM

ADDED : நவ 06, 2026 08:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 08:21 PM ADDED : நவ 06, 2026 08:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே, மின்கம்பி மீது லாரி உரசியதால், மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின் தடை ஏற்பட்டதால், அதிர்ஷ்டவசமாக லாரியில் மின்சாரம் பாயாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த, காவேரிப்பட்டு பகுதியில் தனியார் அகர்பத்தி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு, அகர்பத்திகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

நேற்று அகர்பத்தி நிறுவனத்தில் இருந்து அகர்பத்தி ஏற்றி செல்ல கன்டெய்னர் லாரி ஒன்று, லோடு ஏற்றி கொண்டு புறப்பட்டது. அப்போது சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பி மீது கன்டெய்னர் லாரி உரசியதில், மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், உடனே மின் தடை ஏற்பட்டது.

இதனால், லாரியில் மின்சாரம் பாயாமல் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த மின் ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, 3 மணி நேரம் போராடி, மின்கம்பியை சீரமைத்து, மீண்டும் மின் வினியோகம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us