UPDATED : நவ 30, 2024 11:19 AM
ADDED : நவ 30, 2024 10:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் தொடரும் கனமழையால் 9 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, கத்திவாக்கத்தில் 121.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கத்திவாக்கம், மாணிக்கம் நகர், வியாசர்பாடி, பெரம்பூர், ஸ்டான்லி நகர், நுங்கம்பாக்கம், கெங்கு ரெட்டி, துரைசாமி, அரங்கநாதன் ஆகிய 9 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்த 9 சுரங்கப்பாதைகள் தவிர மற்ற, 12 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 21 சுரங்கப்பாதைகளில், 9 சுரங்கப்பாதைகளில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. எனினும் வாகனங்கள் தொடர்ந்து சென்று வருகின்றன.