'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் தொடர் சிகிச்சை முக்கியம்: முதல்வர்
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் தொடர் சிகிச்சை முக்கியம்: முதல்வர்
ADDED : டிச 03, 2025 06:44 AM

சென்னை: 'நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்களில், நோய் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுபவர்களுக்கு, தொடர் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் நல்வாழ்வு துறை வாயிலாக, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதாவது:
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களுக்கு வரும் மக்களுக்கு குடிநீர், இருக்கை வசதிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதை உறுதி செய்ய வேண்டும்.
முகாம்களுக்கு வரும் மக்களுக்கு வழிகாட்டு தல்களை வழங்க, போதுமான அளவில் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.
முகாம்கள் நடப்பது குறித்து, பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும். முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பாலுாட்டு வதற்கு, முகாம்களில் தனியாக அறை வசதி ஏற்படுத்த வேண்டும்.
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்களில் உரிய வசதிகளை செய்து தர வேண்டும். முகாம்களில் நோய் கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுபவர்களுக்கு, தொடர் சிகிச்சை அளிப்பதை, மக்கள் நல்வாழ்வு துறை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

