தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கொளத்துார் எம்.எல்.ஏ.,வுக்கு தொடர் சிகிச்சை

கொளத்துார் எம்.எல்.ஏ.,வுக்கு தொடர் சிகிச்சை

கொளத்துார் எம்.எல்.ஏ.,வுக்கு தொடர் சிகிச்சை


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 08:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை, கொளத்துார் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., வி.எஸ்.பாபுவுக்கு, ஒரு மாதமாக தீவிர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

75 வயதான பாபுவுக்கு, கடந்த மாதம் 9ம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் ஆகியோர், மருத்துவமனைக்கு சென்று, நலம் விசாரித்தனர். அவர்கள் சந்தித்த புகைப்படம் வெளியிடப்படவில்லை.

அதேநேரம், ஒரு மாதமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும், எம்.எல்.ஏ., பாபுவின் உடல்நிலை குறித்து, அவ்வப்போது மருத்துவமனை தரப்பில் செய்திகள் பகிரப்படுகின்றன. அவருக்கு, பல்துறை டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us