UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:44 PM
அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத அரிசியின் சந்தை விலை, த.வெ.க., ஆட்சிக்கு வந்த, கடந்த ஐந்து மாதங்களில், மூன்றாம் முறையாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகளின் விலை, பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், அரிசி விலை தொடர்ந்து 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருப்பது, ஏழை, எளிய மக்கள் மீது, கூடுதல் பொருளாதார சுமையை ஏற்றியுள்ளது.
விலைவாசி உயர்வு உட்பட, மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் அனைத்து விவகாரங்களிலும், த.வெ.க., அரசு மெத்தனமாக செயல்படுகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கி போயுள்ளது.
எனவே, முதல்வர் விஜய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை, கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதோடு, அனைவருக்கும் நியாயமான விலையில் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
– தினகரன்
பொதுச்செயலர், அ.ம.மு.க.,
