‛சண்டாளர்' பெயர் சர்ச்சை: அரசுக்கு ஆணையம் பரிந்துரை
‛சண்டாளர்' பெயர் சர்ச்சை: அரசுக்கு ஆணையம் பரிந்துரை
ADDED : ஜூலை 15, 2024 06:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சண்டாளர் என்ற சாதிப்பெயர் வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என பட்டியலினத்தோர் மாநில ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாவது,
தமிழ்நாடு பட்டியலினத்தோர் சாதிப்பிரிவில் 48 வது பிரிவாக ‛சண்டாளர்' என்ற சாதிப்பெயர் உள்ளது. எனவே அரசியல் மேடைகளில், நகைச்சுவையாகவும், இழிவுபடுத்தும் நோக்கிலே ‛சண்டாளர்‛ என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்படும். இவ்வாறு அதில் பரிந்துரை செய்துள்ளது.

