காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு; பின்னணியில் ஸ்டாலின்: பா.ஜ.,
காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு; பின்னணியில் ஸ்டாலின்: பா.ஜ.,
ADDED : ஜூலை 20, 2025 04:53 AM

திருப்பூர் : ''தமிழகத்தில் மோசமான நிலைக்கு தொழில் நிறுவனங்கள் செல்வதற்கு, மிக முக்கிய காரணமே மின் கட்டண உயர்வு தான்,'' என தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கிறதா என சந்தேகம் உள்ளது. காமராஜர் குறித்து உருவ கேலி செய்தவர்கள் தி.மு.க..வினர். பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல திருச்சி சிவாவை பேச வைத்தவர் முதல்வர் ஸ்டாலின்தான். அவர், இப்போது பேச வைத்தது தவறோ என யோசிக்கிறார். காங்கிரஸ் தரப்பிலிருந்து முனகல் மட்டுமே கேட்கிறது; எதிர்ப்புகள் இல்லை.
மோசமான நிலைக்கு தொழில் நிறுவனங்கள் செல்வதற்கு, மிக முக்கிய காரணமே மின் கட்டண உயர்வு தான். மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி., சுந்தரேசனின் வாகனம் பறிக்கப்பட்ட சம்பவம் மற்றும் அவரது குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது பா.ஜ.,வின் கோரிக்கை. ஒரு டி.எஸ்.பி.,க்கே, தி.மு.க., அரசில் இதுதான் நிலை என்றால், மற்ற போலீசாரின் நிலை என்ன? இவ்வாறு நாகேந்திரன் கூறினார்.