sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாய்க்கு துலாபாரம் செலுத்தியதால் சர்ச்சை: மன்னிப்பு கோரினார் நடிகை

/

நாய்க்கு துலாபாரம் செலுத்தியதால் சர்ச்சை: மன்னிப்பு கோரினார் நடிகை

நாய்க்கு துலாபாரம் செலுத்தியதால் சர்ச்சை: மன்னிப்பு கோரினார் நடிகை

நாய்க்கு துலாபாரம் செலுத்தியதால் சர்ச்சை: மன்னிப்பு கோரினார் நடிகை

5


ADDED : ஜன 22, 2026 07:59 PM

Google News

ADDED : ஜன 22, 2026 07:59 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: தெலுங்கானாவில் உள்ள கோவிலில் தனது வளர்ப்பு நாய்க்கு துலாபாரம் செலுத்தியதால் சர்ச்சை உண்டானதை தொடர்ந்து நடிகை டினா ஸ்ரவ்யா மன்னிப்பு கோரியுள்ளார்.

தெலங்​கா​னா​வில் உள்ள மேடாரம் ஜதாரா பகு​தி​யில் சம்​மக்​கா-​சா​ரக்கா அம்​மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், பக்தர்கள் தங்களது குழந்தைகளின் நலனுக்கு நேர்த்திக்கடனாக வெல்லத்தை எடைக்கு எடை துலாபாரம் செலுத்துவது வழக்கம். இவ்வளவு பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு சில தெலுங்கு படங்களில் நடித்த இளம் நடிகை டீனா ஸ்ரவ்யா, தனது வளர்ப்புநாயுடன் சென்றார். அங்கு நாய்க்கு துலாபாரம் செலுத்தி உள்ளார். இது குறித்து புகைப்படம் வெளியாக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. குழந்தைகளுடன் தொடர்பு உடைய பாரம்பரிய நிகழ்ச்சியில் எப்படி வளர்ப்பு நாயை பயன்படுத்தலாம் எனக் கேள்வி எழுப்பினர்.

இவ்வளவு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, டீனா ஸ்ரவ்யா மன்னிப்பு கோரி விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: 12 வயதான தனது செல்லப் பிராணிக்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. நாய் குணமடைய வேண்டி அம்மனை பிரார்த்தனை செய்தேன். நாய் குணமடைந்ததும், கோவிலுக்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்றினேன். நாய் மீது கொண்ட அன்பு காரணமாகத் தான் செய்தேன். மத வழிபாட்டை அவமரியாதை செய்வதோ அல்லது பக்தர்களின் உணர்வுகளை அவமதிக்கும் எண்ணம் ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us