sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பண்ணை, பூங்காக்களால் கிடைத்த ரூ.200 கோடி: தோட்டக்கலை துறை 'காலி' செய்ததால் சர்ச்சை

/

 பண்ணை, பூங்காக்களால் கிடைத்த ரூ.200 கோடி: தோட்டக்கலை துறை 'காலி' செய்ததால் சர்ச்சை

 பண்ணை, பூங்காக்களால் கிடைத்த ரூ.200 கோடி: தோட்டக்கலை துறை 'காலி' செய்ததால் சர்ச்சை

 பண்ணை, பூங்காக்களால் கிடைத்த ரூ.200 கோடி: தோட்டக்கலை துறை 'காலி' செய்ததால் சர்ச்சை


ADDED : நவ 21, 2025 11:28 PM

Google News

ADDED : நவ 21, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பண்ணைகள், பூங்காக்கள் வாயிலாக கிடைத்த 200 கோடி ரூபாயை, உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தோட்டக்கலைத் துறை காலி செய்தது சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 40 லட்சம் ஏக்கரில், காய்கறிகள், பழங்கள், பூக்கள், கீரை வகைகள், வாசனைப் பொருட்கள், மூலிகைகள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பொருட்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

உயிர் உரங்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான காய்கறி நாற்றுகள், விதைகள், பழ மரக்கன்றுகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து குறைந்த விலையில் வழங்க, மாநிலம் முழுதும், 72 இடங்களில் தோட்டக்கலைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மண்புழு உரம், உயிர் உரங் கள் போன்றவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பொதுமக்களுக்கு தேவையான வீட்டுத்தோட்ட இடுபொருட்கள், மரக்கன்றுகள் தயாரித்து விற்கப்படுகின்றன. இதற்காக தோட்டக்கலைப் பண்ணைகளில், ஆண்டுதோறும் 20 லட்சம் நடவு செடிகள், மரக்கன்றுகள் வரை உற்பத்தி செய்ய அரசு நிதி வழங்குகிறது.

இதேபோல், தோட்டக்கலைத் துறை சார்பில், சென்னை, திண்டுக்கல், நீலகிரி, ராமநாதபுரம், சேலம், தென்காசி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டங்களில், 24 இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை பொதுமக்களின், பொழுதுபோக்கு மையங்களாவும், உள்ளூர் மக்களின் உடற்பயிற்சி, நடைபயிற்சி திடலாகவும், தாவரவியல் படிக்கும் மாணவ, மாணவி யரின் பயிற்சி களமாகவும் திகழ்கின்றன.

தினமும் ஏராளமானோர், கட்டணம் செலுத்தி இந்த பூங்காக்களை பயன்படுத்தி வருகின்றனர். பண்ணை மற்றும் பூங்காக்கள் வாயிலாக, தோட்டக்கலைத் துறைக்கு, ஆண்டு தோறும் 20 முதல் 25 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்தது.

கடந்த 2021ம் ஆண்டு வரை கிடைத்த 200 கோடி ரூபாய், வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற் போதைய அரசு, பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் பராமரிப்புக்கு போதிய நிதி வழங்கவில்லை.

இதை காரணம் காட்டி, புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிக்கு வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த 200 கோடி ரூபாயை, தோட்டக்கலைத் துறை செலவு செய்துள்ள தகவல் அம்பலமாகி உள்ளது.

செலவு கணக்கு மேலும், தோட்டக்கலைப் பண்ணைகளில், நடவு செடிகள் உற்பத்தி செய்வதற்கான இடுபொருட்கள் கொள்முதல், தினக்கூலி தொழிலாளர்க ளுக்கு ஊதியம் வழங்குதல் எனக்கூறி, வருகிற வருவாயும் செலவிடப்படுகிறது. ஆண்டுதோறும் கிடைத்த 20 முதல் 25 கோடி ரூபாய்க்கும், செலவு கணக்கு எழுதப்பட்டு வருகிறது.

ஆனால், முறையான பராமரிப்பின்மை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில், பூங்காக்கள் சீரழிந்து வருகின்றன.

வேளாண் துறை உயர் அதிகாரிகள், இந்த பண்ணை கள் மற்றும் பூங்காக்களுக்கு ஆய்வுக்கு செல்லாமலே, கேட்கும் நிதியை வழங்குவதை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்தி வரு வதாக புகார் எழுந் துள்ளது.

அதிகாரிகள் கூறுவது என்ன?

தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், சென்னையில் கலைஞர் நுாற்றாண்டு பூங்கா, கோத்தகிரியில் ஜான்சல்லிவன் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டன. புதிதாக சில பூங்காக்கள் அமைக்கும் பணியும், பழைய பூங்காக்கள் புனரமைப்பு பணிகளும் நடந்து வருகின்றன. இவற்றுக்கு தயாரிக்கப்பட்ட, திட்ட மதிப்பீட்டு தொகையை விட கூடுதல் நிதிக்கு, வங்கியில் இருந்த 200 கோடி ரூபாய் டிபாசிட் தொகை செலவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு கூடுதல் நிதி தேவை என்றால் அரசு ஒப்புதல் பெறவேண்டும். இதற்காக வேளாண் துறை செயலர், நிதித்துறை செயலர் உள்ளிட்ட 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய ஆட்சிமன்ற நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஒப்புதல் பெறாமல், விதியை மீறி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, வங்கியில் டிபாசிட் செய்யப்பட்ட 200 கோடி ரூபாய், எந்தெந்த திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டது என்ற விபரங்களை வெளியிட வேண்டும். முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us