உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 10, 2026 09:41 PM
ADDED : அக் 10, 2026 09:16 PM
அ நிறம் | அளவு
குடியாத்தம்: குடியாத்தம் அருகே, மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பிரேம்குமார், 39, உயிரிழந்தார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம், கீழ் செட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார்; கொத்தனார். இவர், குடியாத்தம், வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் வேலை செய்தார்.
நேற்று முன்தினம் வீட்டின், 2வது மாடியில் சாரம் அமைக்கும் பணியில் பிரேம்குமார் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற மின்சார கம்பியில், அவர் கை பட்டதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
குடியாத்தம் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
