UPDATED : அக் 13, 2026 10:18 PM
ADDED : அக் 13, 2026 06:07 PM

புதுக்கோட்டை: பெருங்களுர் அருகே மணவிடுதியில் டிரான்ஸ்பார்மரை உடைத்து, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் திருடப்பட்டதால், மின்சாரம் இன்றி பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களுர் அருகே மணவிடுதி கிராமத்தில், 22 கிலோ வோல்ட் உயரழுத்த மின்பாதையில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் இதனை உடைத்து, அதனுள் இருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் மற்றும் செம்பு சுருள்களை திருடி சென்றுள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த மின் சாதனங்கள் திருடப்பட்ட சம்பவத்தால், விவசாயிகள், பொதுமக்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, மாவட்டத்தில் பல பகுதிகளில் டிரான்ஸ்பார்மரில் உள்ள காப்பர் கம்பிகள் திருடப்பட்டு வருவதால், மின் வாரியத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
