sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/'கட்டுக்குள் உள்ளது கொரோனா'

'கட்டுக்குள் உள்ளது கொரோனா'

'கட்டுக்குள் உள்ளது கொரோனா'


ADDED : ஜன 18, 2024 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2024 02:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்க துவங்கி, ஒன்றரை மாதங்களில், 702 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது அது கட்டுக்குள் வந்திருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜே.என்.1.1 வகை கொரோனா பரவ துவங்கியதால், தினமும், 40 பேர் வரை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. அந்த வகையில், ஒன்றரை மாதங்களில் 702 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஜே.என்.1.1 வகை கொரோனா பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் கட்டுக்குள் வந்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியாவில் கேரளா போன்ற மாநிலங்களிலும், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் ஜே.என்.1.1 வகை கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்ததால், பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாமல், கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. அதேநேரம், மற்ற காய்ச்சல்கள் போல், கொரோனாவும் அவ்வப்போது உருமாறி பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us