தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/இருவேறு இடங்களில் இருவர் வெட்டிக்கொலை: கோர்ட்டில் இரண்டு பேர் சரண்; 4 பேர் கைது

இருவேறு இடங்களில் இருவர் வெட்டிக்கொலை: கோர்ட்டில் இரண்டு பேர் சரண்; 4 பேர் கைது

இருவேறு இடங்களில் இருவர் வெட்டிக்கொலை: கோர்ட்டில் இரண்டு பேர் சரண்; 4 பேர் கைது


UPDATED : நவ 05, 2026 04:05 PM

ADDED : நவ 05, 2026 01:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 04:05 PM ADDED : நவ 05, 2026 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூளகிரி: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி அருகே வெவ்வேறு இடங்களில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இக்கொலைகளில் தொடர்புடைய இருவர், கோர்ட்டில் சரணடைந்த நிலையில், 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பருவீதியை சேர்ந்தவர் ஆதி, 23; கூலித்தொழிலாளி. கடந்த சில ஆண்டுகளாக, ராயக்கோட்டை அடுத்த சிங்காரப்பேட்டையில், தன் பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். கடந்த, 2025 செப்., 17ல் கெலமங்கலம், த.வா.க., ஒன்றிய பொறுப்பாளர் ரவிசங்கர் கொலை வழக்கில், ஆதி முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த அவர், வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, முகலுார் பாரத கோவில் அருகே, ராயக்கோட்டை - சூளகிரி சாலையில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த மர்மநபர்கள், அவரை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு தப்பினர்.

இந்நிலையில், ஆதி கொலை தொடர்பாக ஓசூர் குற்றவியல் நீதிமன்றத்தில், ராயக்கோட்டை அருகே கொப்பகரையை சேர்ந்த காசி, 29, மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா, 23, ஆகியோர் நேற்று சரணடைந்தனர். இருவரையும் ராயக்கோட்டை போலீசார் ஒரு நாள் கஸ்டடியில் எடுத்து, விசாரித்து வருகின்றனர்.

கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் கூறியதாவது:

சரணடைந்துள்ள காசி மற்றும் கொலையான ஆதி ஆகியோரிடையே கடந்த, இரண்டரை ஆண்டுக்கு முன், எருதுவிடும் விழாவில் முன்விரோதம் இருந்துள்ளது. அப்போது ஆதி, 'உன் நண்பன் ரவிசங்கரையே கொன்று விட்டேன். உனக்கும் அதே கதிதான்' என மிரட்டியுள்ளார். ஆதியை விட்டு வைத்தால் ஆபத்து என நினைத்த காசி, நண்பரான ஜெயசூர்யா உதவியுடன், நேற்று முன்தினம் ஒரு பிக்கப் வேனில் வந்து, ஆதி வந்த பைக் மீது மோதி கிழே தள்ளி, ஆதியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு, அருகிலுள்ள ஆற்றோரம் பிக்கப் வேனை நிறுத்தி தப்பினர். போலீசார் நெருங்குவதை அறிந்து, நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இவ்வாறு, போலீசார் கூறினர்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சப்படியை சேர்ந்தவர் சங்கர், 33; கட்டட தொழிலாளி. இவரது தங்கை அருணா, 27. இவருக்கும், சீபம் கிராமத்தை சேர்ந்த திருமலை, 31, என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. நேற்று முன்தினம் மைத்துனர் திருமலை வீட்டிற்கு சங்கர் சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள நர்சரி ஒன்றில் பணிபுரியும் நாமக்கலை சேர்ந்த தொழிலாளி முருகேசன், 50, என்பவருடன், சீபம் அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டிய மண் சாலையில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது, டூவீலரில் வந்த அதே பகுதியை சேர்ந்த மகேஷ், 20, பெருமாள், 20, ஆகியோர், ஓரமாக அமர்ந்து, மது குடியுங்கள் எனக்கூறினர். இதனால் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சங்கர், அவர்கள் இருவரையும் அடித்து, டூவீலர் சாவியையும் பிடுங்கி உள்ளார். மகேஷ் தாக்கியதில் சங்கர் லேசான காயமடைந்தார். ஆத்திரம் அடங்காத மகேஷ், திருமலை வீட்டிற்கு சென்று, அங்கிருந்த சங்கரிடம் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியானார். தடுக்க வந்த திருமலையையும் தோள்பட்டையில் வெட்டி விட்டு, மகேஷ் தப்பினார். படுகாயமடைந்த திருமலை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உத்தனப்பள்ளி போலீசார், வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த சீபம் கிராமத்தை சேர்ந்த மகேஷ், 20, மற்றும் அவரது நண்பர்களான நஞ்சாநட்டி பெருமாள், 19, சீபம் கிராமத்தை சேர்ந்த சிவராஜ், 20, ரவிக்குமார், 19, ஆகிய நான்கு பேரை, நேற்றிரவு கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us