ADDED : நவ 21, 2025 12:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: புதிதாக 6 அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவித்து உரிய விசாரணை நடத்த பாஜ., வலியுறுத்தி உள்ளது.
கோவைக்கு வந்த பிரதமர் மோடியிடம் தமிழக பாஜ பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் அளித்த மனுவில்;
தமிழக அரசியல் சூழ்நிலை சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் விவரித்தார். மேலும் ஏற்கனவே அமலாக்கத்துறை சிபிஐ விசாரணையில் இருக்கும் மந்திரிகளுடன் சேர்த்து புதிதாக ஊழல் புரிந்த 6 மந்திரிகளின் பெயர் மற்றும் ஆதாரத்துடன் மனு ஒன்றை வழங்கினார். இதனால் சம்மந்தப்பட்ட மந்திரிகள் கலக்கமடைந்துள்ளனர்

