தணிக்கை துறையில் மூடி மறைக்கப்படும் ஊழல்கள்: பன்னீர்
தணிக்கை துறையில் மூடி மறைக்கப்படும் ஊழல்கள்: பன்னீர்
ADDED : ஜூலை 26, 2025 02:24 AM

சென்னை: முன்னாள் முதல்வர் பன் னீர்செல்வம் அறிக்கை:
தலை மை தணிக்கை துறை இயக்குநர் பதவிக்கு, முதலில் இந்திய கணக்கு தணிக்கை அலுவலர் நியமிக்கப்பட்டார்.
பல்வேறு காரணங்களால், அவர் பதவி விலகியதும், அந்த பொறுப்பை, நிதித்துறை கூடுதல் செயலர் கவனிக்கிறார்.
அ வர், ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில், தணிக்கை துறை அலுவலர்களை, நாகரிகமற்ற வார்த்தைகளில் திட்டுவதை, வாடிக்கை யாக வைத்து உள்ளாராம்.
ஒவ்வொரு தணிக்கை துறைக்கும், அந்தந்த துறையில் இருந்தே, மூத்த அதிகாரிகள் இயக்குநராக நியமிக்கப்படலாம் என்ற நிலை இருந்தும், நிதித்துறை அதிகாரிகளே, இயக்குநர் பதவியில் நியமிக்கப்படுகின்றனர்.
இதனால், அந்தத் துறையி ல் பணிபுரிவோருக்கு, பதவி உயர்வு, பதவி வாய்ப்பு பறிபோகிறது. உயர்மட்டக் குழு என்ற பெயரில், முறைகேடுகள் மூடி மறைக்கப்படுவதாகவும், தணிக்கை துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் கூறுகின்றனர்.
அனைத்து தணிக்கை துறைகளையும் ஒருங்கிணைத்து, பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையிலும், தி.மு.க., அரசு ஈடுபட்டு உள்ளது.
ஒட்டுமொத்தமாக, தணிக்கை துறை களின் செயல்பாட்டை குறைத்து, முறை கேடுகளை மூடி மறைப்பதில், தி.மு.க., அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது, கடும் கண்டனத்திற்குரியது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.