ஊராட்சி செயலர் தேர்வில் ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ஊராட்சி செயலர் தேர்வில் ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ADDED : டிச 13, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:
ஊரக வளர்ச்சி துறையில், ஊராட்சி செயலர் பதவிக்கான நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டதாக நேற்று முன்தினம், குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டது. இணையதளத்தை நேற்று பார்த்தவர்களுக் கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் குளறுபடிகள் உள்ளன.
கோவை பெண் ஒருவர், 500 மார்க்கிற்கு 494 மார்க் வாங்கி செலக்ட் ஆகியுள்ளார். ஆனால், 496 மதிப்பெண் வாங்கியவர் தோல்வி அடைந்துள்ளார்.
எந்த அடிப்படையில் தேர்வு செய்தனர் என்பது யாருக்கும் தெரியவில்லை. நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் தேர்ச்சி பெறவில்லை. லஞ்சம் கை மாறி இ ருப்பதாக பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

