தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ரேஷன் சர்க்கரை, பருப்பு வினியோகத்தில் முறைகேடு

ரேஷன் சர்க்கரை, பருப்பு வினியோகத்தில் முறைகேடு

ரேஷன் சர்க்கரை, பருப்பு வினியோகத்தில் முறைகேடு


ADDED : ஜன 25, 2015 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2015 11:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ரேஷன் கடைகளில், சர்க்கரை மற்றும் பருப்பு வினியோகத்தில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, அவற்றை, 'பாக்கெட்டில்' அடைத்து வழங்க வேண்டும்' என, பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக ரேஷன் கடைகளில், ஒரு கிலோ துவரம் மற்றும் உளுத்தம் பருப்பு, தலா, 30 ரூபாய்க்கும்; சர்க்கரை இரண்டு கிலோ, கிலோ, 13.50 ரூபாய் என்ற விலையிலும் வழங்கப்படுகிறது.

பருப்பு வகைகளை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், சர்க்கரையை கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்தும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு நகர்வு செய்கிறது. ரேஷன் கடைகளில் இவற்றை வினியோகம் செய்வதில், பெருமளவு முறைகேடு நடக்கிறது. குறிப்பாக ரேஷன் ஊழியர்கள், எடையில் தில்லுமுல்லு செய்கின்றனர். அதனால், 'ரேஷன் கடைகளில், சர்க்கரை மற்றும் பருப்பு வகைகளை, பாக்கெட்டில் அடைத்து வழங்க வேண்டும்' என பொதுமக்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, பொதுமக்கள் கூறியதாவது:மளிகை கடைகளில் பருப்பு, சர்க்கரை விலை அதிகமாக உள்ளது. ஆனாலும், அவற்றின் தரமும், எடையும் சரியாக உள்ளது. இதற்கு காரணம், அவை, பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படுவதே. மேலும், பருப்பு எப்போது தயாரிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களும், பாக்கெட்டில் அச்சிடப்படுகின்றன. அதேபோல், ரேஷன் கடைகளிலும், பருப்பு மற்றும் சர்க்கரையை பாக்கெட்டிலும் அடைத்து வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

எடை குறைவது ஏன்?

ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு குறைந்த எடையில் பொருட்களை சப்ளை செய்வதால், அதை சமாளிக்க, பொதுமக்களுக்கு குறைவாக வழங்கப்படுகிறது. உணவு பொருட்களை, பாக்கெட்டில் வழங்க வேண்டும் என, நாங்களும், அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினார்.

தேவை எவ்வளவு:

ரேஷனில் வழங்க, மாதந்தோறும், 36 ஆயிரம் டன் சர்க்கரை; 13,500 டன் துவரம் பருப்பு; 9,000 டன் உளுத்தம் பருப்பும் தேவைப்படுகிறது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us