யோகா - இயற்கை மருத்துவ படிப்புக்கு இன்று கவுன்சிலிங்
யோகா - இயற்கை மருத்துவ படிப்புக்கு இன்று கவுன்சிலிங்
ADDED : டிச 27, 2024 01:38 AM
சென்னை:யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளில், காலியாக உள்ள, 253 இடங்களுக்கு, இன்று நேரடி 'கவுன்சிலிங்' நடக்க உள்ளது.
அரசு மற்றும் தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரிகளில், பி.என்.ஒய்.எஸ்., என்ற இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு, 1,660 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு, ஜூன் மாதம் துவங்கியது. மொத்தம், 2,320 பேர் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 1,187 பேர் நிர்வாக இடங்களுக்கும் விண்ணப்பித்தனர். மூன்று கட்ட கவுன்சிலிங் முடிந்த நிலையில், 253 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
காலி இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கவுன்சிலிங், அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வு குழு அலுவலகத்தில், இன்று நடக்க உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் மாணவர் சேர்க்கையில், உரிய விண்ணப்பங்களை சமர்ப்பித்து சேரலாம் என, மாணவர் தேர்வு குழு தெரிவித்துள்ளது.

