ADDED : செப் 09, 2011 02:44 PM
புதுடில்லி: ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள அமர்சிங் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு கோர்ட் தள்ளி வைத்தது. கடந்த 2008-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மன்மோகன் அரசு மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ. எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமர்சிங் உள்ளிட்ட 4 பேர் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் செல்வாக்க மிக்க தலைவராக இருந்த அமர்சி்ங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அமர்சிங் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு டில்லி டீஸ்ஹசாரியா கோர்டில் நடந்து வருகிறது.
முன்னதாக அமர்சிங் தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தனக்கு ஏற்கனவே சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளதாலும் ,மருத்துவ சிகிச்சை பெற வேண்டி ஜாமினில் விட கோரினார்.வழக்கை விசாரித்த நீதிபதி சங்கீதா தின்ஹாராஷெகால், அமர்சிங்கின் மருத்து சான்றிதழை சமர்பிக்குமாறு கூறினார். வழக்கை வரும் 12 -ம் தேதி (திங்கள்கிழமை) தள்ளி வைத்தார். முன்னதாக இன்று காலையே கோர்டில் ஆஜராக அமர்சிங் தயாரானார்.தற்போது டில்லியில் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் , அமர்சிங் கோர்டிற்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.