சி.பி.ஐ., விசாரணை வேண்டும் கேட்கிறது மார்க்சிஸ்ட் கட்சி
சி.பி.ஐ., விசாரணை வேண்டும் கேட்கிறது மார்க்சிஸ்ட் கட்சி
ADDED : ஜன 26, 2025 01:10 AM
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
வேங்கைவயல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் நியாயமான கேள்விகள் உள்ளன. குற்றப்பத்திரிகை தாக்கலில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் பல சந்தேகம் உள்ளது. எனவே, இந்த வழக்கை மீண்டும் ஒரு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அது, சி.பி.ஐ.,யாகக்கூட இருக்கலாம். சந்தேகம் இருக்கும் போது, அதை சி.பி.ஐ., விசாரிக்க தமிழக அரசு உத்தரவிடுவதில் எந்த நஷ்டமும் இல்லை. இந்த குற்றப்பத்திரிகை தாக்கலில் சந்தேகமும், கேள்வியும் இருப்பதால், அதை தீர்க்க சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
பல ஆண்டுகளாக கனிமவள கொள்ளை நடந்து வருகிறது. அரசே கையகப்படுத்த வேண்டும். அதன் வாயிலாக, அரசுக்கு வருவாய் வரும். சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், அதை நிறைவேற்றவில்லை.
தற்போது, ஏழு தாது மணல் நிறுவனத்திற்கு, 3,528 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதை சரியாக வசூல் செய்ய வேண்டும். அரசு எதுக்கு கேட்டாலும் பணம் இல்லை என்று கூறுகிறது.
அரசுக்கு பணம் வரக்கூடிய பல துறைகளை தனியாரிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் கனிம வளத்தை கொள்ளை அடிக்கின்றனர். அதனால், இதை அரசே கையகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

