ADDED : அக் 30, 2025 01:01 AM

திருப்பூர்: திருப்பூருக்கு வந்திருந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தன் தாயிடம் ஆசி பெற்றார்.
திருப்பூருக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் மாலை வந்தார். திருப்பூர் குமரன் சிலை, மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, குமார் நகரில் உள்ள டாலர் தோட்டத்தில் இரவு தங்கினார். அங்கு தனது தாயார் ஜானகியம்மாளிடம் ஆசி பெற்றார்.
நேற்று காலை ெஷரீப் காலனியில் தனது வீட்டு அருகே சித்தி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து, சந்திராபுரம் செல்வவிநாயகர் கோவில், குலதெய்வமான ஸ்ரீ பாலைமரத்து அய்யன் கோவில், முத்துாரில் உள்ள செல்லாண்டியம்மன், செல்வக்குமாரசாமி, குகை கோவில், குப்பண்ணசுவாமி ஆகிய கோவில்களில் வழிபட்டார்.
கோவில்களில், அவரை பார்க்க காத்திருந்த பொதுமக்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
தொடர்ந்து, திருப்பூரில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார்.
தொடர்ந்து, ெஷரீப் காலனியில் உள்ள முன்னாள் எம்.பி.,யும், சித்தப்பாவுமான சி.கே.குப்புசாமியை சந்தித்து நலம் விசாரித்து, அவரிடம் ஆசி பெற்றார். அதன்பின், கோவை சென்று, விமானம் வாயிலாக மதுரை சென்றார்.

