ADDED : டிச 05, 2024 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் சிற்பங்களை, தொல்லியல் துறை பாதுகாத்து பராமரிக்கிறது. அர்ஜுனன் தபசு சிற்பத்தை ஒட்டியுள்ள பாண்டவர் குடைவரையில், கனமழை பெய்யும் போது மட்டும், குடவரை உட்புறம் மழைநீர் புகுந்து பெருக்கெடுத்தது.
தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, குடைவரை அமைந்துள்ள பாறை குன்றின் மேற்பரப்பில், நீண்ட காலத்திற்கு முன் ஏற்பட்ட விரிசல் பகுதிகளை கண்டறிந்தனர். அதில் சுண்ணாம்பு, நுண்கற்கள், கசிவு தடுப்பு ரசாயன திரவம் ஆகியவற்றின் கலவையை நிரப்பினர். அதற்கும் கட்டுப்படாமல் மழைநீர் குடவரைக்குள் தொடர்ந்து பெருக்கெடுத்ததை அடுத்து, உட்புற விரிசல்களிலும் தற்போது சுண்ணாம்பு கலவை நிரப்பி அடைத்தனர்.