ADDED : அக் 31, 2025 10:26 PM
சென்னை:சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது போல, ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர்புக்கு, டி.ஜி.பி., அலுவலகத்தில், எஸ்.பி., நிலையில் புதிய பதவி உருவாக்கப்பட்டு, ஐ.பி.எஸ்., அதிகாரி முத்தரசி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் டி.ஜி.பி., அலுவலகத்தில், பொதுப்பிரிவு பணியையும் கூடுதலாக கவனிப்பார்.
மாநில குற்ற ஆவண காப்பகத்தின் ஐ.ஜி., ஜெயஸ்ரீ, ஊர்காவல் படைக்கும், தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி., அவினேஷ் குமார், மாநில குற்ற ஆவண காப்பகத்தை கூடுதல் பொறுப்பாகவும் கவனிப்பார் .
புதிதாக, சென்னை புழல் போக்குவரத்து துணை கமிஷனர் பணியிடம் உருவாக்கப்பட்டு, ஆவடி போக்குவரத்து துணை கமிஷனராக பணிபுரியும் சங்குவிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.
துாத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சி கல்லுாரி முதல்வராக பணிபுரியும் எஸ்.பி., மகேஸ்வரி, சென்னையில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லுாரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.

