ADDED : பிப் 05, 2025 10:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்போது, அந்த மாவட்டங்களில், பல்வேறு துறைகளின் நிர்வாக வசதிக்காக, புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.
அவற்றுக்கேற்ப அரசு துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல், வனத்துறையில் புதிய கோட்டங்கள் உருவாக்க வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டது.
வனத்துறை தலைவர் அனுப்பிய பரிந்துரை அடிப்படையில், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், புதிய வனக்கோட்டங்களை உருவாக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.