sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிரைம்: கள்ளக்காதல் ஜோடி ரயிலில் பாய்ந்து தற்கொலை

/

கிரைம்: கள்ளக்காதல் ஜோடி ரயிலில் பாய்ந்து தற்கொலை

கிரைம்: கள்ளக்காதல் ஜோடி ரயிலில் பாய்ந்து தற்கொலை

கிரைம்: கள்ளக்காதல் ஜோடி ரயிலில் பாய்ந்து தற்கொலை

1


ADDED : மார் 23, 2024 07:05 AM

Google News

ADDED : மார் 23, 2024 07:05 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரண்மனைபுதுாரைச் சேர்ந்தவர் மணிகண்டன் 26. இவரும் அதை ஊரைச் சேர்ந்த தேன் மொழியும் ஆறு ஆண்டு களாக காதலித்து வந்தனர். தேன்மொழியின் பெற்றோர் கோவையைச் சேர்ந்த உறவினர் முரளிக்கு அவரை 2020ல் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்துக்கு பிறகும் மணிகண்டனும், தேன் மொழியும் தினமும் மொபைல் போனில் பேசி வந்தனர். இதை அறிந்த கணவர் முரளி, தேன்மொழியை எச்சரித்துள்ளார். தேன்மொழி பெற்றோரிடமும் இதை தெரிவித்துள்ளார். கணவர் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் மார்ச் 17 மணிகண்டனுடன் தேன்மொழி மாயமானார். நேற்று முன் தினம் இரவு ரெட்டியார்சத்திரம் அருகே பாலக்காட்டிலிருந்து சென்னை சென்ற ரயிலில் பாய்ந்து, இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

ஒடிசாவில் இருந்து கஞ்சா வாலிபர்கள் கைது


ஸ்ரீவில்லிபுத்துாரைச் சுற்றியுள்ள நுாற்பாலைகளில், ஒடிசா, பீஹார் உள்ளிட்ட வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்காக அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று காலை 6:00 மணியளவில் நாச்சியார்பட்டி விலக்கு அருகில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு டூ - வீலரில் வந்த மூவரை விசாரித்து, சோதனையிட்ட போது, 2 கிலோ உயர் ரக கஞ்சா இருந்தது தெரிந்தது. அவர்கள், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஜித், 38, குணா நாயக், 22, அஜித் நாயக், 23, ஆகியோர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கி வேலை செய்வதும் தெரிய வந்தது.

ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதும் தெரிந்தது. மூவரையும் கைது செய்த எஸ்.ஐ., செல்லபாண்டியன் மற்றும் போலீசார், 2 கிலோ கஞ்சா, ஒரு டூ - வீலரை பறிமுதல் செய்தனர்.

மதுரை விமானத்தில் தங்கம் கடத்தல்


துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. மதுரை மாவட்டம் மேலுார் மண்டையன் மகன் பாக்கியம் என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர் கொண்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்குள் 160 கிராம் தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ. 10 லட்சத்து 88 ஆயிரத்து 320.

டிரைவர் வெட்டிக்கொலை


திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏறந்தை கிராமத்தை சேர்ந்தவர் தேவபாலன் ( 50), லாரி டிரைவர். இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள அம்மன் கோயில் ஓடையில், தலை மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

அதில் கடந்த 2017 ல் இதே பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் கொலை செய்யபட்டார். அந்த கொலை வழக்கில், தற்போது கொலையான தேவபாலன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, பின் கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் அவரது மகன்கள் சேர்மத்துரை, சுரேஷ், உத்திரகுமார் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. தலைமறைவான இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிற்றாறு அணையில் குதித்து கேரள வாலிபர் தற்கொலை


கேரள மாநிலம் காட்டாக்கடை அருகே ஆரியநாடு கீழ்பாலூர் பகுதியை சேர்ந்த சனில் குமார் மகன் சனீஷ்(28). காட்டாக்கடை பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவருக்கு அப்பகுதியை சேர்ந்த பெண்ணுடன் காதல் இருந்து வந்தது. 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்கு பெண்ணின் வீட்டார் தடையாக இருந்துள்ளனர். இதனால் சனீஷுடன் அந்த பெண் பழகுவதை நிறுத்தி உள்ளார். காதலித்து வந்த நாட்களில் இருவரும் ஒன்றாக திற்பரப்பு, சிற்றார் பகுதிகளில் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், காதல் தோல்வியால் மனம் உடைந்த சனீஷ், கடந்த 20ம் தேதி காரில் தனியாக திற்பரப்பு வந்துள்ளார். இரவு மதுபோதையில் காரை ஓட்டி வந்தவர், சங்கரன்கடவு, வள்ளகடவு பகுதியில் உள்ள உணவகத்தின் அருகே காரை நிறுத்தியுள்ளார். பின்னர் சிற்றாறு அணையை நோக்கி நடந்து செல்லும் போது, தனது நண்பரை போனில் தொடர்பு கொண்ட சனீஷ், தனது காதல் கைகூடாததால் வாழ பிடிக்கவில்லை என்றும், தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது ஆதார் உட்பட அனைத்து ஆவணங்களும் பேன்ட் பாக்கெட்டில் உள்ளதாகவும் கூறி போனை துண்டித்துவிட்டு அணையில் குதித்து தற்கொலை செய்தார்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சனீஷை தேடினர். 3 நாள் தேடலுக்கு பிறகு சனீஷின் உடல் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி மர்மச்சாவு


மதுரை மாவட்டம், கோசாகுளத்தைச் சேர்ந்தவர் வீரபிரபு. இவரது மகள் மதுசுவேதா, 11, ஐந்தாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் குளியலறையில் இறந்து கிடந்தார். கதவை உடைத்து குடும்பத்தினர் உடலை மீட்டனர். உடல்நலம் பாதிப்பால் இறந்தாரா என, கூடல்நகர் இன்ஸ்பெக்டர் தர்மர் விசாரிக்கிறார்.

நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க., பிரமுகர் ரகளை


தேர்தல் நடத்தை அமலானதை தொடர்ந்து நாகை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அமைத்திருந்த, எல்.இ.டி., விளக்குகளால் ஆன முதல்வர் ஸ்டாலின் புகைப்படங்களை, தேர்தல் அலுவலர்கள் கடந்த 18ம் தேதி அகற்றினர். அப்போது எல்.இ.டி., போர்டு சேதமடைந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற 14 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஜிலைகா பீவியின் கணவர் முகமது அபுபக்கர், கமிஷனர் அறைக்கு சென்றார். கமிஷனர் அலுவலகத்தில் இல்லாததால், கமிஷனர் அறையின் கதவை எட்டி உதைத்து, அங்கிருந்த ஊழியர்களிடம் முதல்வர் படத்தை எப்படி எடுத்தீர்கள் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

அச்சமடைந்த ஊழியர்கள், கலெக்டருக்கு தகவல் தெரிவித்ததோடு, வெளிப்பானையம் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கோரி புகார் அளித்தனர். தி.மு.க., பிரமுகர் நகராட்சி அலுவலகத்தில் தகராறில் ஈடுபடும் சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு நிலவி வருகிறது.






      Dinamalar
      Follow us