sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண்கள், குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்கள் மூன்று ஆண்டுகளில் 50.71 சதவீதம் அதிகரிப்பு

/

பெண்கள், குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்கள் மூன்று ஆண்டுகளில் 50.71 சதவீதம் அதிகரிப்பு

பெண்கள், குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்கள் மூன்று ஆண்டுகளில் 50.71 சதவீதம் அதிகரிப்பு

பெண்கள், குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்கள் மூன்று ஆண்டுகளில் 50.71 சதவீதம் அதிகரிப்பு


ADDED : அக் 11, 2025 01:44 AM

Google News

ADDED : அக் 11, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், 50.71 சதவீதம் அதிகரித்துள்ளது.

Image 1480518


தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனினும், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை குறையவில்லை.

Image 1480519


ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடியே உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த, 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை, 5,934 ஆக இருந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், கடந்த மூன்று ஆண்டுகளில், 50.71 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதாவது, பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு, கொலை மிரட்டல், கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள், 2021ல் 8,501 ஆக இருந்தது; 2023ல் 8,943 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், 2021 முதல் 2023 வரை, 1,208 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். 82 பெண்கள் பாலாத்கார முயற்சிக்கு ஆளாகி உள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த 2019ல், 4,139 ஆக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை, மூன்று ஆண்டுகளில், 68.36 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2021ல் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், 6,064 ஆக இருந்தன. இதுவே, 2023ல் 6,968 ஆக அதிகரித்துள்ளது.

இதுபோல போக்சோ வழக்குகளும் அதிகரித்துள்ளன. இவ்வாறு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது, கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:

தமிழக அரசு பெண்களுக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், அவர்கள் பாதிப்புக்குள்ளாவது குறையவில்லை.

இதற்கு காரணம், பெரும்பாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள், ஆளும் கட்சி பிரதிநிதிகளே, இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குகின்றனர்.

அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட இது வழிவகுக்கிறது.

எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

2019 முதல் தமிழகத்தில் பதிவான, பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை:
ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை
2019 5,934
2020 6,630
2021 8,501
2022 9,207
2023 8,943 (கடந்த 2019ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 5,934ல் இருந்து படிப்படியாக அதிகரித்து, 2023ல் 8,943 ஆக உயர்ந்துள்ளன. அதாவது அ.தி.மு.க., அரசுடன் ஒப்பிடுகையில், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50.71 சதவீதம் அதிகரித்துள்ளன.)
2019 முதல் ஆண்டு வாரியாக குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை:
ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை
2019 4,139
2020 4,338
2021 6,064
2022 6,580
2023 6,968 (கடந்த 2019ல் 4,139 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், 2023ல் 6,968 ஆக உயர்ந்துள்ளன. அதாவது தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் 68.36 சதவீதம் அதிகரித்துள்ளன)
போக்சோ குற்றங்களின் மொத்த எண்ணிக்கை:
ஆண்டு/ குற்றங்களின் எண்ணிக்கை:
2019 2,396
2020 3,090
2021 4,465
2022 4,968
2023 4,581



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us