உள்ளடக்கத்திற்கு செல்ல
பெண்கள் மீதான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது
பெண்கள் மீதான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது
ADDED : மார் 15, 2026 04:59 AM
அ நிறம் | அளவு
பெண்கள் மீதான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது துாத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத் தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட செய்தியறிந்து, அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினருடன் பேசினேன்; அவர்களுடன் காங்கிரஸ் துணை நிற்கும் என்றும், சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும் உறுதி அளித்தேன். மாணவியை கொன்ற குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.
- கிரீஷ் ஷோடங்கர் மேலிட பொறுப்பாளர், தமிழக காங்கிரஸ்
