ADDED : நவ 10, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை, இ.கம்யூ., ஏற்கவில்லை. ஆரம்பத்திலேயே எஸ்.ஐ.ஆர்., தோல்வி யடைந்து விட்டது. முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்ட பின்னரும், அவசர கதியில் எஸ்.ஐ.ஆரை புகுத்துவது ஏற்புடையதல்ல. இது பார்லிமென்ட் ஜனநாயகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி விடும்.
'அரசியல் கட்சிகள் பெரிய பேரணிகள் நடத்தினால், காப்புத்தொகை கட்ட வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கூட்டத்தில் 10,000 பேர் திரண்டால், 20 லட்சம் ரூபாய் காப்புத் தொகை கட்ட வேண்டும் என்பது ஜனநாயகத்தை யும், கட்சிகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். உடனடியாக இதை கைவிட வேண்டும்.
- வீரபாண்டியன் மாநில செயலர், இ.கம்யூ.,

