ADDED : நவ 10, 2025 12:11 AM

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் சிறப்பான ஆட்சியை தந்து, ஏழைகளின் கண்ணீரை துடைத்தனர்; பல தியாகங்களுக்கு இடையே, அ.தி.மு.க.,வை வழி நடத்தினர். அதனால் தான், அ.தி.மு.க., தழைத்தது. எம்.ஜி.ஆரை நம்பி லட்சக்கணக்கான தொண்டர்கள் உருவாகினர். அவர் மறைவுக்கு பின், சோதனைகள் வந்தபோது, அதை தகர்த்தவர் ஜெயலலிதா. தியாகத்தில், சோதனையில் பிறந்த இயக்கம் அ.தி.மு.க.,
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என, 45 ஆண்டுகளாக பணி செய்து வருகிறேன். நான் என்றைக்கும் இளவரசரை போல் இருந்ததில்லை. எளிமையாக வாழ்க்கை நடத்துபவன். அதனால் தான், எங்கள் வீட்டு பிள்ளை என்ற முறையில் கோபி தொகுதி உள்ளது. பல்வேறு தரப்பினரும் என்னிடம் அளித்த கடிதங்கள், கண்ணீர் சிந்தும் அளவுக்கு உள்ளன. என் தியாகம், உழைப்பு, சேவையை யாரும் கொச்சைப்படுத்தி விடக்கூடாது என அவற்றை அளித்தனர். ஏனெனில், உழைப்பவரை எவராலும் வீழ்த்த இயலா து.
- செங்கோட்டையன் முன்னாள் அமைச்சர்

