ADDED : செப் 30, 2024 06:20 AM

சென்னை : “ஆளுங்கட்சியின் குறை, நிறைகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுவது, மக்களுக்கு நன்மையான காரியம் தான்,” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அமைச்சர்கள் பதவியேற்புக்கு நேற்று வந்தபோது, அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு நிறைய பணிகளை செய்கிறது. இன்னும் வேகமாக செயல்பட, துணை முதல்வர் அரசுக்கு துணையாக இருப்பார். இந்தியாவில் எந்த பதவி கொடுத்ததற்கு, விமர்சனம் இல்லாமல் உள்ளது. பிரதமருக்கு, முதல்வருக்கு விமர்சனம் இல்லையா. விமர்சனம் செய்வது தான் அரசியல்.
எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சியின் குறை, நிறைகளை சுட்டிக்காட்டுவது மக்களுக்கு நன்மையான காரியம் தான். எந்த தவறும் செய்யாத மனிதன் மீது குறை கூறக்கூடாது. விளையாட்டு துறைக்கு இளம் ரத்தம் பாய்ந்ததும், விளையாட்டில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். சாமானிய மக்கள், இளைஞர்கள், உதய நிதி துணை முதல்வராவதை வரவேற்கின்றனர். இவ்வாறு அப்பாவு கூறினார்.

