அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆர்.எஸ்.எஸ்., மீது விமர்சனம்
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆர்.எஸ்.எஸ்., மீது விமர்சனம்
ADDED : ஆக 17, 2025 03:28 AM

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டை குறிப்பிட்டு, அந்த அமைப்பின் சேவையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியதை வரவேற்கிறோம். நுாற்றாண்டு காணும், ஆர்.எஸ்.எஸ்., பற்றி பிரதமர் குறிப்பிட்டதை, காங்., தலைவர்கள் சிலர் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், அம்பேத்கர் என தேசத் தலைவர்கள் பலரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தேசபக்தியை, வேற்றுமை இல்லாத ஹிந்து ஒற்றுமைக்கான செயல்முறையை மனதார பாராட்டினர்.
தற்போது, உத்தராகண்டில் ஏற்பட்ட பெருவெள்ளம், நிலச்சரிவு மீட்பு பணியில், பேரிடர் மீட்பு குழுவினருக்கு முன்பே, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் சேவையாற்ற ஓடோடிச் சென்றதை காண்கிறோம். எனவே, ஆர்.எஸ்.எஸ்., மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால், பொய் விமர்சனங்கள் முன் வைப்பதைக் கண்டிக்கிறோம்.
- காடேஸ்வரா சுப்ரமணியம்
மாநில தலைவர், ஹிந்து முன்னணி