ADDED : ஜன 15, 2026 07:04 AM

சென்னை: தமிழகத்தில், 'டிட்வா' புயல் காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில், பல மாவட்டங்களில் கன மழை பெய்தது.
இதனால், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 30 மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, வேளாண்மை, வருவாய் துறையினர் இணைந்து, பயிர் அறுவடை ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, 33 சதவீதத்திற்கு மேல், 1.33 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த பயிர்களுக்கு நிவாரணம், 110 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என, வேளாண் துறை இயக்குநர் முருகேஷ் வாயிலாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 94.2 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டு உள்ள 83,526 விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 8,123 ரூபாய் இடுபொருள் மானியம் என்ற பெயரில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
