ADDED : ஜூலை 15, 2025 02:08 AM
சென்னை: திருநெல்வேலி காங்., - எம்.பி., ராபர்ட் புரூசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனிடம் குறுக்கு விசாரணை நிறைவடைந்தது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ், 1.65 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் நயினார் நாகேந்திரனிடம், ராபர்ட் புரூஸ் தரப்பில் குறுக்கு விசாரணை நடந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆஜராகி இருந்தார். அவரிடம், ராபர்ட் புரூஸ் தரப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பி, குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.
குறுக்கு விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.