உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 08, 2026 01:22 AM
அ நிறம் | அளவு
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
சட்டசபை தேர்தலில், விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சி.வி.சண்முகம் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெற்றார்.
இரு பதவிகளில், ஒரே நேரத்தில் இருக்க முடியாது என்பதால், நேற்று மாலை டில்லி சென்ற சி.வி.சண்முகம், தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து, யார் ஆட்சி அமைப்பர் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், எம்.பி., பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.
