UPDATED : நவ 30, 2024 06:50 PM
ADDED : நவ 30, 2024 04:16 PM

சென்னை: பெஞ்சல் புயல் எதிரொலியாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.
இதன்படி
*கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து கிளம்பும்
*சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11: 30 மணிக்கு கிளம்பும்
*திருவனந்தபுரம் ரயில் கடற்கரையில் இருந்து இரவு 11:55 மணிக்கு கிளம்பும்
*கொல்லம் கிளம்ப வேண்டிய ரயில் கடற்கரையில் இருந்து 12:30 மணிக்கும்
*மும்பை செல்லும் லோக் மானிய திலக் ரயில் திருவள்ளூரில் இருந்து இரவு 7: 30 மணிக்கும்
*பெங்களூரு செல்லும் லால்பார்க் ரயில் மாலை 4:45 மணிக்கு திருவள்ளூரில் இருந்தும் கிளம்பும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விரைவு ரயில் ரத்து
ஜோலார்ப்பேட்டை - சென்னை சென்ட்ரல் இடையிலான ஏலகிரி விரைவு ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்ப்பேட்டை செல்லும் ரயில் ரத்தான நிலையில், மறுமார்க்கத்தில் நாளை காலை 5 மணிக்கு வர வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.