ADDED : ஜன 02, 2024 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்த வருவோருக்காக, தினமும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தினமும் அவரது ரசிகர்களும், கட்சியினரும் வருகின்றனர்.
அவர்களின் பசியாற்றுவதற்காக, தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்க, அக்கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, மாநில துணை செயலர் பார்த்தசாரதி ஏற்பாட்டில், நேற்று மதிய உணவு வழங்கப்பட்டது.

