ADDED : ஆக 03, 2024 06:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனக்குறை இல்லாத மனிதர் இல்லை. மனக்குறையோ, பணக்குறையோ எதுவானாலும் துாத்துக்குடி குலசேகரன் பட்டினம் முத்தாரம்மனை சரணடைந்தால் போதும்.
பாண்டிய மன்னர்கள் முத்துக்களால் ஆன ஆரத்தை (மாலையாக) அணிவித்ததால் இந்த அம்மன் 'முத்தாரம்மன்' எனப் பெயர் பெற்றாள். இவளை வழிபட அம்மை நோய் குணமாகும். நேர்த்திக்கடன் உள்ளவர்கள் நவராத்திரியின் போது தினமும் தங்களது வீட்டில் நைவேத்தியம் செய்வர். விஜயதசமியன்று விநாயகர், முருகன், காளி, சிவன், கிருஷ்ணர், அனுமன் என விரும்பிய வேடத்தில் கோயிலுக்கு வருவர். அதைப் பார்க்கும் போது தேவலோகத்தில் இருப்பது போல உணரலாம். திருமணம், குழந்தை வரம் தரும் இவளை நவராத்திரியில் விரதமிருந்து தரிசிக்கலாமே.
எப்படி செல்வது
திருச்செந்துாரில் இருந்து 14 கி.மீ.,
நேரம் : காலை 6:00 - 11:00 மணி மாலை 4:00 - 8:00 மணி