ADDED : ஆக 07, 2025 11:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிமலை ஒன்றியம், மேடவாக்கம் ஊராட்சி, 10வது வார்டில் அரை ஏக்கர் பரப்பளவில் விமலா நகர் பூங்கா அமைந்துள்ளது. விளையாட, நடைபயிற்சி செய்ய என, ஏராளமான சிறுவர்கள் மற்றும் முதியவர்கள், பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன், நுழைவு வாயில் சுற்றுச்சுவரை ஒட்டி உள்ள மின் கம்பம் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தால், கம்பத்தை மாற்றாமல், மின் கம்பிகள் இணையும் பகுதியை மட்டும் அதே கம்பத்தில் கீழ் இறக்கி கட்டியுள்ளனர்.
இதனால், மின் கம்பிகள் நுழைவு வாயில் எதிரே தாழ்வாக செல்கின்றன. எனவே, அசம்பாவிதம் நிகழும் முன், சேதமடைந்த கம்பத்தை அகற்றி புதிதாக நட்டு மின் வினியோகம் செய்ய வேண்டும்.
- லட்சுமி, மேடவாக்கம்.