ADDED : டிச 21, 2024 07:51 PM
சென்னை:டி.ஏ.பி., உரம் விலையை ஜனவரி முதல் உயர்த்த, தனியார் உர தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும், பூச்சிகளை கட்டுப்படுத்தவும், மகசூலை பெருக்கவும், 'யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் கூட்டு உரங்கள்' உள்ளிட்டவற்றையும், பூச்சிக் கொல்லி மருந்துகளையும், விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு, யூரியா, டி.ஏ.பி., உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இதில், யூரியாவை மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து டி.ஏ.பி., இறக்குமதி செய்யப்பட்டு, 50 கிலோ மூட்டை, 1,350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜனவரி முதல், டி.ஏ.பி., உள்ளிட்ட சில உரங்களின் விலையை, மூட்டைக்கு 200 ரூபாய் அதிகரிக்க, தனியார் உர தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.