ADDED : மே 10, 2026 12:47 AM
'தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் தமிழக வெற்றிக் கழகம், வரும் 13ம் தேதிக்குள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் உத்தரவிட்டு உள்ளார்.
சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், ஐந்து கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இன்று முதல்வராக விஜய், பொறுப்பேற்க உள்ள நிலையில், வரும் 13ம் தேதிக்குள், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, இன்று முதல்வராக விஜய் பதவியேற்றதும், தற்காலிக சபாநாயகராக ஒருவரை தேர்வு செய்து, கவர்னரிடம் தெரிவிப்பார்.
அவருக்கு கவர்னர் பதவிப் பிராமணம் செய்து வைப்பார். அதன்பின், எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு தேதி அறிவிக்கப்படும். அன்று சட்ட சபையில், எம்.எல்.ஏ.,க்களுக்கு, தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதன்பின், சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் குறிப்பிடும் தேதியில், பெரும்பான்மையை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
