ADDED : அக் 05, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'மத்திய அரசை பின்பற்றி, தீபாவளிக்கு முன்பாக, தமிழக அரசு அலுவலர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும்' என, தமிழக அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் அமிர்தகுமார் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:
மத்திய அரசு அலுவலர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை, மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது.
அதுபோல, தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதிய பணியாளர்களுக்கு, கடந்த ஜூலை 1 முதல் மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அறிவித்தால், மகிழ்ச்சியாக கொண்டாட உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.