sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 துணை முதல்வருக்கு கொலை மிரட்டல்

/

 துணை முதல்வருக்கு கொலை மிரட்டல்

 துணை முதல்வருக்கு கொலை மிரட்டல்

 துணை முதல்வருக்கு கொலை மிரட்டல்


ADDED : நவ 15, 2025 01:17 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: துணை முதல்வர் உதயநிதி மற்றும் அவரது மகன் இன்பநிதிக்கு, மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

டி.ஜி.பி., அலுவலகத்தின் இ - மெயிலுக்கு, தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் வீடுகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. போலீசாரும், மிரட்டல் விடுக்கப்பட்டோரின் வீடுகளில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன், சோதனை நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், டி.ஜி.பி., அலுவலக இ - மெயிலுக்கு, தமிழர் விடுதலை அமைப்பு என்ற பெயரில், மர்ம நபர்கள், துணை முதல்வர் உதயநிதி, அவரது மகன் இன்பநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இருவரையும் கொலை செய்ய, 10 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு இருப்பதாக, இ - மெயிலில் தெரிவித்துள்ளனர். இந்த மிரட்டல் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us