ADDED : ஜூன் 24, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''மக்கள்தொகை கணக்கெடுப்புடன், ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று பா.ம.க., சட்டசபை தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, ''வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்,'' என்றார்.
அதற்கு முதல்வர் அளித்த பதில்:
இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று சொன்னால், ஜாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்புடன், மத்திய அரசால் நடத்தப்பட வேண்டும். இதற்காக, இந்த சட்டசபை கூட்டத் தொடரில், ஒரு தீர்மானத்தை கொண்டு வரலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஜி.கே.மணி ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.