தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சிறு தொழில் நிறுவனங்களுக்கு தனி தரவு தளம் உருவாக்க முடிவு

சிறு தொழில் நிறுவனங்களுக்கு தனி தரவு தளம் உருவாக்க முடிவு

சிறு தொழில் நிறுவனங்களுக்கு தனி தரவு தளம் உருவாக்க முடிவு


ADDED : மார் 03, 2024 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 04:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்னென்ன தொழிலில் ஈடுபட்டுள்ளன; எந்தெந்த பொருட்களை உற்பத்தி செய்கின்றன என்பது உள்ளிட்ட முழு விபரங்களை, ஒரே தரவு தளத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சி யில் அரசு களமிறங்கிஉள்ளது.

தமிழகத்தில், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை, மின் சாதனங்கள், வாகன உதிரிபாகங்கள், உணவு பொருட்கள், ஜவுளி என, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

நாடு முழுதும் உள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்களை முறைப்படுத்த, மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை, 'உத்யம்' சான்று வழங்குகிறது. இதற்கு, அதன் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் மானிய திட்டங்களுக்கு, உத்யம் சான்று அவசியம்.

தமிழகத்தில் உள்ள மொத்த குறு, சிறு தொழில் நிறுவனங்களில், 23.21 லட்சம் மட்டும் உத்யம் சான்றுக்கு பதிவு செய்துஉள்ளன.

தற்போது, தமிழக அரசின், 'பேம் டி.என்' எனப்படும் குறு, சிறு, நடுத்தர தொழில் வசதியாக்கல் நிறுவனம், தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களின் தகவல் அடங்கிய தரவு தளத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழக தொழில் நிறுவனங்களின் தரவு தளம் என்பது, கணினி மென்பொருள் வடிவில் இருக்கும். இதை, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை நிர்வகிக்கும்.

அந்த தளத்தில், மாவட்ட வாரியாக, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொழில் நிறுவனங்கள்; அவை என்னென்ன பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

ஒவ்வொன்றிலும் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்; வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம் பெறும். இதற்காக, அந்த தகவல்கள் நிறுவனங்களிடம் வாங்கப்படும்.

ஒவ்வொரு பகுதியிலும் எந்த பொருளை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன; அவற்றின் தேவை என்ன என்பதை சுலபமாக கண்டறிய முடியும்.

அதற்கு ஏற்ப புதிய திட்டங்கள், ஒவ்வொரு துறைக்குமான தனி கொள்கைகளை செயல்படுத்த உதவியாக இருக்கும். மேலும், நிறுவனங்களுக்கு முதலீடு, சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது போன்ற உதவிகளை செய்ய முடியும்.

விரைவில், ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, தகவல் தரவு தளம் உருவாக்கும் பணி துவங்கப்படும். இது, அரசுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பாலமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us